2025 மே 03, சனிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சமுர்த்தி முகாமையாளர் இடைநிறுத்தம்

Super User   / 2013 நவம்பர் 01 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சமுர்த்தி முகாமையாளர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

செங்கலடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றும் சி. திலீப் குமார் என்பரே சமுர்த்தி முகாமையாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். தாபனக்கோவை விதிகளுக்கு அமைவாக இவரின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான இவர் மூன்று சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நவம்பவர் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X