2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் வர்த்தக விவசாய ஊக்குவிப்புச் செயலமர்வு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 07 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கான வர்த்தக விவசாயம் தொடர்பான ஊக்குவிப்பு முழுநாள் செயலமர்வு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இளம் விவசாயிகளை உருவாக்குதலும், ஊக்குவித்தலும் செயற்திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச் செயலமர்வானது தோட்டப் பயிர்ச் செய்கை, தேனீ வளர்ப்பு, சேதனப் பசளை விவசாயம், பசளை தயாரிப்பு, மீள் சுழற்சி விவசாயம் எனப் பல வகைப்பட்ட துறைகள் சார்ந்து விரிவுரைகள் வளங்கப்பட்டன.

இச்செயலமர்வில் வளவாளர்களாக எம்.சலீம் , சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தின் ஈ.சுகுந்ததாசன், கரடியனாறு - விவசாயப் போதனாசிரியர் கே.லிங்கேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இளம் விவசாயிகளை விவசாயத்துறையில் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் களப்பயணம் அத்துடன் வர்த்தக முறையிலான விவசாயத்தில் ஈடுபடுதல் தொடர்பான அறிவூட்டல் பதிவுகளும் நடைபெறுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .