2025 மே 01, வியாழக்கிழமை

கிழக்கில் காணிப் பிரச்சினைக்கு உணர்ச்சிவசப்பட்டு முடிவு காண முடியாது: சந்திரகாந்தன்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 24 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கிழக்கு மாகாணத்திலே காணி மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை எழுந்துள்ளன. இதில் உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சாதனையாளர் பாராட்டு விழா நேற்று (23) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'அம்பாறை மாவட்டத்திலே முஸ்லிங்கள்
காணிகளைப் பிடிக்கின்றார்கள் அதனைக் காப்பாற்றுவதற்கு சிங்களவர்கள் தமிழர்களுக்கு உதவி செய்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே சிங்களவர்கள் காணிகளைப் பிடிக்கின்றார்கள் அதற்கு தமிழர்கள் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள், திருகோணமல மாட்டத்திலே முஸ்லிங்களுடைய காணிகளை சிங்களவர்கள் பிடிக்கின்றார்கள் அதற்கு சிங்களவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே இந்த விடயத்தில் ஒரு பரந்துபட்ட பிரச்சினை எழுந்துள்ளது. இதனை சட்டத்தினூடாகவும் சாந்தப் போக்குடனும்தான் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர உணர்ச்சிவசப்பட்டு இதனைக் கையாள முடியாது.

பட்டிப்பளை பிரதேசத்தின் எல்லை அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதியினைத் கடந்து அமைந்துள்ளது. கடந்த காலத்தில் அங்கு எம்மவர்கள் செல்ல முடியாத சூழல் இருந்தது அதுபோல் இப்பொழுதும் தமிழ் மக்கள் அப்பகுத்திக்குச் செல்ல முடியாத சூழல் இருக்கின்றது.

இதனை மிகவும் கவனமான முறையில் கையாண்டு சாந்தப் போக்குடன் சட்டத்திற்குட்ட வரைகையில்தான் தீர்க்க வேண்டும். எழுந்தமானமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .