2025 மே 01, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலிருந்து புவி றஹ்மத்துல்லாஹ் விடுவிப்பு

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கஞ்சா வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டிலிருந்து காத்தான்குடி வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ் (புவி) இன்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு  இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் என்.எம்.அப்துல்லாஹ் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லாவை வழக்கலிருந்து விடுதலை செய்ததுடன் நீதிமன்றம் அழைப்பானை அனுப்பினால் மாத்திரமே நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் நீதவான்  உத்தரவிட்டார்.

கடந்த 31.10.2013 வியாழக்கிழமை காலை பத்திரிகை ஆசிரியரின் வீட்டில் கஞ்சா இருப்பதாக தெரிவித்து பொலிஸ் மோப்ப நாய் மூலம் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன்போது காத்தான்குடி பொலிஸார் கஞ்சா கட்டு ஒன்றை அவரது வீட்டு வளாகத்தில் வைத்து கைப்பற்றினர். இதையடுத்து பிரதம அசிரியரை சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் அன்றைய தினமே அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே கஞ்சா வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டிலிருந்து எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ் (புவி) விடுவிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .