2025 மே 01, வியாழக்கிழமை

நிலக்கடலை விதைகள் வழங்கும் வைபவம்

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காலம் ஆரம்பித்துள்ளதால் நிலக்கடலை செய்கைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் சுமார் 12ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை நிலக்கடலை செய்கை பண்ணப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் பி.உகநாதன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் நிலக்கடலைச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் விநியோகிக்கப்பட்டன.

வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே.வில்வரததினம் தலைமையில் நடைபெறற வைபவத்தில் விவசாய பணிப்பாளர் பி.உகநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இப்பிரதேசத்தில் பாலையடிவெட்டை காக்காச்சிவெட்டை 40ஆம் கொலணி சங்கர்புரம் உள்ளிட்ட பல இடங்களில் நிலக்கடை செய்கை பண்ணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .