2025 மே 01, வியாழக்கிழமை

கடல் கொந்தளிப்பு; மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 29 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்புக் காணப்படுவதால், மீன்பிடி நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளன.

புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், நாவலடி, பூநொச்சிமுனை உட்பட பல இடங்களில்  கடல் கொந்தளிப்புக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லாத நிலையில், கடற்கரை பிரதேசம் வெறிச்சோடிக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பகுதிக் கடலில் நேற்றுமுன்தினம்  புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பைத் தொடர்ந்து மீனவர் ஒருவர் படுகாயமடைந்ததுடன்,  05  மீன்பிடிப் படகுகளும் முழுமையாகச் சேதமடைந்தன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .