2025 மே 01, வியாழக்கிழமை

பெரும்போக நெற்செய்கைக்காக உர விநியோகம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 29 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


பெரும்போக நெற்செய்கைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு கோடியே 67 இலட்சத்து 76,454 கிலோ உரம் மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 68 இலட்சத்து 39,830 கிலோ உரம் இதுவரையில் விவசாயகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யூரியா எனப்படும் உரம் ஒரு கோடியே ஒரு  இலட்சத்து 3421 கிலோவும் பிஎஸ்டி எனப்படும் உரம் 26 இலட்சத்து 76,130 கிலோவும் எம்ஓபி எனப்படும் உரம் 30 இலட்சத்து 96,903 கிலோவும் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது உர விநியோகம் மாவட்டத்திலுள்ள 17 கலநல சேவைகள் திணைக்களத்தினூடாகவும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .