2025 மே 01, வியாழக்கிழமை

வவுணதீவில் தேசிய ஆள் அடையாள அட்டை இடம்பெயர் சேவை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 29 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


கிழக்கு மாகாணத்தில் தேசிய ஆள் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவை இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வவுணதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவுப்  பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இவ் நடமாடும் செவையில் ஆட்பதிவுத் திணைக்கள கிழக்கு மாகாண காரியாலய பிரதி ஆணையாளர் எஸ். கிரிதரன், கபே நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அமுல்படுத்தும் அதிகாரி ரீ. குகதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள், வவுணதீவு, ஆயித்தியமலை, மற்றும் பட்டிப்பளை  பொலிஸ் நிலைய அதிகாரிகள், கிராம சேவை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

இந்த இடம்பெயர் சேவைக்கு யூ.எஸ்.எய்ட் நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியிருக்கின்றது. மனித உரிமைகள் ஆய்வு நிலையம் மற்றும் கபே நிறுவனம் என்பன ஆளடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இவ் இடம்பெயர் சேவையை நடத்தி வருகின்றன.

இடம்பெயர் படப்பிடிப்பு சேவையும் முத்திரைக் கட்டணங்களும் மேற்படி நிறுவனங்களினால் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆளடையாள அட்டை இடம்பெயர் சேவையில் பிறப்புப் பதிவு, திருமணப் பதிவு மற்றும் அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான இன்னோரன்ன ஆவணங்களும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்களும் இன்றைய இடம்பெயர் சேவையில் இவலச சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று கபே நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .