2025 மே 01, வியாழக்கிழமை

கிராம நீதிமன்ற வீதியினை விரைவாக செப்பனிடுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மூன்று மாதங்களுக்கு மேலாக தோண்டப்பட்ட நிலையில் உள்ள மட்டக்களப்பு ஏறாவூர் கிராம நீதிமன்ற வீதியினை விரைவாக செப்பனிட்டு தருமாறு கிழக்கு மாகாண புறநெகும திட்ட பணிப்பாளர் அவர்களிளுக்கு ஏறாவூர் கிராம பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஏறாவூர் கிராம பொது மக்கள் சார்பாக ஏறாவூர் மொகைதீன் பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.எஸ்.அபுதாகீர் அவர்கள்; கிழக்கு மாகாண புறநெகும திட்ட பணிப்பாளர் அவர்களிளுக்கு மனு ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'கிராம நீதி மன்ற வீதியினது முன்பு பிரதான வீதியின் இரண்டாம் நிலை வீதியாகும். பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்படும் போது இவ்வீதியே மாற்று வீதியாக தொழிட்படுகின்றது. இவ்வீதியானது தார் வீதியாக காணப்பட்டதுடன்; இதுவரை காலமும் பெரும் வெள்ளம் ஏற்பட்ட போதிலும் இவ்வீதியில் ஒரு துளி நீரும் தேங்கி நின்றதை காண முடியாது.

ஆனால் கிராம நீதி மன்ற வீதியின் தற்போதய நிலையில் நெல்சிப் திட்டத்தின் கீழ் நகர சபையினால் கொங்கிரீட் வீதியாக மாற்றியமைக்க ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2013-09-07 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக இவ்வீதியானது இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டது. இதன் பின்பு இவ்வீதியானது இரண்டு மாதங்களாக தோன்டப்பட்ட நிலையிலேயே காட்சியளித்தது. இதனால் மழை நீர் தேங்கி நின்றது.

இவ் விதியில் மட்.அறபா வித்தியாலயம் அமைந்துள்ளதுடன் இப் பாடசாலையானது சாதாரன பத்திர பரீட்சை நிலையமாகவும் காணப்படுகின்றது. எனவே இவ்வீதியில் மழை நீர் தேங்கி காணப்படுகின்றது. அடை மழை பொழியுமாக இருந்தால் பரீட்சையின் போது மாணவ, மாணவிகள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.

இவ் விதியில் ஆற்றங்கறை முகைதீன் ஜூம்ஆ, மஸ்ஜித், மீரா முகைதீன் ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் பிரதேச செயலகம் அமைந்துள்ளது. இதனால் மகல்லா வாசிகள் ஜூம்ஆ தொழுகையின் போதும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .