2025 மே 01, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 1880 கிராம் நிறையுடைய கஞ்சா  வைத்திருந்த ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.பி.பெரேரா தெரிவித்தார்.

நாவலடி சந்தி பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக  கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்னவின் ஆலோசனையில் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர்  சமர சில்வா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே கஞ்சாவுடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரையும் கஞ்சாவையும் வாழைச்சேனை மாவட்ட/நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.பி.பெரேரா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .