2025 மே 01, வியாழக்கிழமை

நாடகம் எழுதுவது தொடர்பிலான பயிற்சி பட்டறை

Kogilavani   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

சிறுவர் துஷ்பிரயோகம்;, சமூக விரோத செயல்கள் மற்றும் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் முதலியவற்றை வெளிப்படுத்தும் குழுக்களுக்கான நாடகம் எழுதுவது பற்றிய பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்றது.

திருக்கோயில் முதல் வாழைச்சேனை வரையுள்ள கிறிஸ்தவ சபைகளில் 14 வயது முதல் 30 வயது வரையுள்ளவர்கள்; இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர்.

கிறிஸ்தவ சபை அலுவல்கள் திணைக்களத்தினால் அடுத்த வருடம் நடத்தப்படவுள்ள குறு நாடகத்திற்கு ஆயத்தம் செய்யும் முகமாக இப்பயிற்சி இடம்பெறுவதாக தேசிய கிறிஸ்தவ சபையின் பிரதி ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரர் கே.ஜே.அருள்ராஜா தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எஸ்.ஜெயசிங்கம், நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான வி.கௌரிபாலன் மற்றும் பெண் எழுத்தாளர் எஸ்.கலைமயா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .