2025 மே 01, வியாழக்கிழமை

காத்தான்குடியில் தொழில்நுட்பக் கல்லூரி திறப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


காத்தான்குடியில் சகல வசதிகளையும் கொண்ட தொழில்நுட்பக் கல்லூரியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் சவூதி அரேபிய நாட்டு உதவியுடன் மேற்படி தொழில்நுட்பக் கல்லூரி நிர்மாணிக்கப்பட்டது.

காத்தான்குடி கடற்கரை வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி கற்கைநெறி உட்பட 7 கற்கைநெறிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  மேற்படி தொழில்நுட்பக் கல்லூரி மூலம் மாணவர்கள் பெரும் நன்மையடையவுள்ளனர்.

இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,  சவூதி அரேபிய நாட்டுப் பிரதிநிதி அஸ்ஸெய்க் அபூ அப்துல் அசீஸ் பின் அப்துல் அசீஸ் அர்ராசித் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .