2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் தேசிய நத்தார் விழாவை கொண்டாட நடவடிக்கை

Kogilavani   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜவ்பர்கான்


தேசிய நத்தார் விழா இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது.

மத விவகார அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் மட்டக்களபயுபு மகாத்மா காந்தி பூங்காவில் நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை (11) நண்பகல் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றிய தலைவர் அருட்தந்தை கரோல் சேதரன் போல் தலைமையில் நடைபெற்றது.

23வது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் அத்துல கொடுப்பிலி உட்பட உயர் படை அதிகாரிகள், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பரிசோதகர் கிங்ஸ்லி குணசேகர, மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .