2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புழுக்குனாவி பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புழுக்குனாவி பகுதியில் நேற்று புதன்கிழமை மேய்ச்சலுக்காக விடப்பட்ட மாடுகளை பார்ப்பதற்காகச் சென்றபோதே, இவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மகிழடித்தீவைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி பொன்னுத்துரை (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .