2025 மே 01, வியாழக்கிழமை

பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும்  நிரந்தர நியமனம் வழங்கப்படாத பட்டதாரி பயிலுனர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் முகமட் ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 26 பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி எம்.எ.சி.ரனிஸா, கணக்காளர் எஸ்.எச்.நைபிக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேஸ், நிர்வாக உத்தியோகத்தர், எம்.எஸ்.எம்.ரவூப், கிராம சேவகர் பிரிவு நிர்வாக உத்தியோகஸ்தர், ஜி.கிருபாகரன் போன்றோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .