2025 மே 01, வியாழக்கிழமை

புழுக்குனாவி பகுதியிலிருந்து யானையை விரட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட புழுக்குனாவி பகுதியிலிருந்து  காட்டு யானை ஒன்றை விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட புழுக்குனாவி பகுதியில் நேற்று புதன்கிழமை குறித்த காட்டு யானையின் தாக்குதலில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகிழடித்தீவைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி பொன்னுத்துரை (வயது 58) என்பவரே குறித்த  காட்டு யானையின் தாக்குதலில்  உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தன்னிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் கலந்துரையாடியதாகவும் இதன்போது அவர் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த காட்டு யானையை அங்கிருந்து  விரட்டுவதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் வனவிலங்கு பரிபாலன திணைக்களத்துடன் தொடர்புகொண்டு குறித்த காட்டு யானையை புழுக்குனாவிப் பகுதியிலிருந்து  விரட்டுவதற்கான  நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, போரதீவுப்பற்று உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் யானைகளின் அட்டகாசம் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது.

யானைப் பிரச்சினைக்காக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டபோதிலும், அது பயனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .