2025 மே 01, வியாழக்கிழமை

முன்பிள்ளைப்பருவ பாதுகாப்பு வாரம் ஆரம்பித்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


சிறுவர் அபிவிருத்தி மற்றும்  மகளிர் விவகார அமைச்சினால் தேசிய முன்பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை இவ்வாரம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவருகின்றது.

முன்பிள்ளைப்பருவத்தினரின் ஆளுமை விருத்தி மற்றும் அவர்களின் தேடல்களை விருத்தி செய்யும் இத்திட்டத்தினூடாக பல இடங்கள் முன்பள்ளி சிறார்களுக்கு காண்பிக்கப்பட்டன.

காந்தி பூங்கா மற்றும் மகாத்மா காந்தி சிலை உட்பட பல இடங்களை பாலர்கள் பார்வையிட்டனர்.

இது தொடர்பான் விழிப்பூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல இடங்களையும் சேர்ந்த முன்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்;து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .