2025 மே 01, வியாழக்கிழமை

வலயத்திற்கு திரும்பாத ஆசிரியர்களின் சம்பளங்கள் இடைநிறுத்தப்படும்: கல்வி பணிப்பாளர்

Super User   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலிருந்து வேறு வலயங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் தமது வலயத்தில் கடமையேற்க வேண்டும் என வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீ கிருஸ்ணராஜா தெரிவித்தார்.

அவ்வாறு செயற்படவிடின் அவர்களது சம்பளங்கள் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீ கிருஸ்ணராஜா மேலும் தெரிக்கையில்,

"தற்காலிக இடமாற்றங்களை பெற்ற 27 பேர் வேறு வலயங்களில் கடமைகளில் உள்ளனர். இவர்களின் இடமாற்றங்கள் இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இவர்களுக்கான சம்பளங்களை கல்குடா வலயம் வழங்கி வருகிறது.

ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்ற நிலையில் தொடர்ந்தும் இவர்கள் வேறு வலயங்களில் கடமையாற்ற முடியாது. எனவே இவர்கள் 27 பேரும் எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் தமது கடமைகளை கல்குடா வலயத்தில் பொறுப்பேற்க வேண்டும்.

தற்போது இவர்களில் ஒன்பது பேர்    மட்டக்களப்பு வலயத்திலும் மூன்று பேர் சம்மாந்துறை வலயத்திலும், எட்டு பேர் கல்முனை வலயத்திலும் ஐந்து பேர் பட்டிருப்பு வலயத்திலும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு மத்தி ஆகியவற்றில் கடமையாற்றுகின்றனர்.

கல்குடா வலயத்திலுள்ள மாணவர்களின் நலன்கருதி இந்த ஆசிரியர்கள் 27 பேரும் தமது வலயங்களுக்கு கடமைக்குச் சமூகமளிக்க வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .