2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நாவலடி – முகத்துவாரம் வீதியில் மணல் மேடுகள்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


அண்மையில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பைத் தொடர்ந்து  ஏற்பட்ட கடல் அரிப்பினால் நாவலடி – முகத்துவாரம் பிரதான வீதியின் நடுவில்  பல இடங்களில் மணல் மேடுகள் ஏற்பட்டுள்ளன.

மேற்படி  மணல் மேடுகள் காரணமாக  இப்பாதையினூடாக போக்குவரத்துச் செய்வதிலும் சிரமம் காணப்படுகின்றது. மேலும், மோட்டார் சைக்கிள்களையும்; சைக்கிள்களையும் செலுத்திச் செல்கின்றவர்கள் இவற்றினை உருட்டிக்கொண்டே இப்பாதையால் செல்வதை அவதானிக்க முடிகின்றது

சுமார் 05 கிலோ மீற்றர் நீளமான இப்பாதையில் கடல் அரிப்பினால் கொண்டுவரப்பட்ட மணல் நிரம்பி பாதையை முற்றாக மூடியுள்ளது.

மேற்படி  மணல் மேடுகளை அகற்றி பாதையை சீர்செய்து தருமாறு மாநகரசபை நிர்வாகத்திடம் பிரதேசவாசிகள் கேட்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .