2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு பணிப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


மட்டக்களப்பு, வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திடங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெள்ளாவெளி, மதுரங்குடா பிரதேசத்தில் 76.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் மற்றும் கொங்ரீட் வீதிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிடுவதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர். இதன்போதே அவர் மேற்கண்ட பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன்போது அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் வீ.கருணைநாதன், சிரேஷ்ட பொறியியலாளர் எஸ்.மஹிந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .