2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நிரந்தர நியமனம் பெற உதவிய அனைவருக்கும் பட்டதாரிகள் சங்கம் நன்றி தெரிவிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார், தேவ அச்சுதன்

அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக 2000 பட்டதாரிகள் 2012.06.15ஆம் திகதி பொதுநிர்வாக உள்நாட்டலுவல் அமைச்சினால் அரசசேவைக்கு பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்டனர். இப்பயிலுனர்கள் ஒன்றரை  வருட பயிற்சி காலத்தின் பின் தற்போது வழங்கப்பட்ட நிரந்தர நியமன கடிததிதின் மூலம் 02.7.2013 திகதியில் இருந்து நிரந்தர நியமனத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

நாம் அரச சேவையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக வாழ்வாதாரத்துக்கான பல போராட்டங்களை பல்வேறு வகையில் நடத்தினோம். அந்தவகையில் அகில இலங்கை பட்டதாரிகள் சங்கம், கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து நிரந்தர நியமனம் பெறும் வரைக்கும் பலவகையில் பல அணுகுமுறையில் வாழ்வாதாரத்துக்கான பல போராட்டங்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

பயிலுனராக இணைத்துக்கொள்ளப்பட்டு கடமை புரிந்த காலப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட போதும் எமக்கான பல தொழில் அனுபவங்களை பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அரச சேவையில் எம்மை இணைத்துக்கௌ;வதற்கு பல்வேறு வகையில் ஆரம்பம் முதல் இன்று வரையும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும்  உதவி புரிந்த அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி சங்கத்தின் சார்பில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில் இலங்கையில் கிட்டத்தட்ட 50,000 பட்டதாரிகளை அரசசேவையில் உள்வாங்கியதன் மூலம் நாம் அரச சேவையில் இணைக்கப்பட்டமைக்காக அதிமேதகு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றிகளை கூறிக்கோள்கிறோம்.

மேலும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் அமைச்சர், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.

விசேடமாக மட்டக்களப்பு மாவட்ட அரசஅதிபர் திருமதி சாள்ஸ் அம்மையாருக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளதோடு மாவட்ட உதவி அரச அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் சகல பிரதேச செயலாளர்களுக்கும்; மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கும் சகல பிரதேசசெயலக உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.

மேலும் எம்மோடு தோலோடு தோல் நின்று பட்டதாரிகளின் பிரச்சனைகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்திய அனைத்து ஊடகங்களுக்கும் ஊடகவியலாளருக்கும் மற்றும்  அகில இலங்கை பட்டதாரிகள் சங்கம், கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கம், எமது மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் குறிப்பாக எமது நிரந்தர நியமன கடிதங்களை கொழும்பு சென்று ஒழுங்குபடுத்திய எமது பட்டதாரி நண்பர்களுக்கும் நன்றிகளை கூறுவதோடு மனித நேய அமைப்புகள், வர்த்தக சங்கம் மற்றும் மறைமுகமாக உதவிய அனைவருக்கும் நாம் சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதேவேளை, தற்போது பெரும்பாலான பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டள்ள போதிலும் தமது ஒன்றரை வருட பயிற்சிகாலத்தை முடித்துள்ள உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரி பயிலுனர்கள், 45 வயதை தாண்டிய பட்டதாரிகளும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும் எனவே இவர்களுக்கு மிக விரைவில நிரந்தர நியமனம் வழங்குமாறும், நிரந்தர நியமனம் பெற்றவர்களுக்கு அவர்களுக்கான சம்பளம், சம்பள நிலுவைகளை விரைவாக பெற்றுக்கொள்ளுவதற்கும் சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டக்கொள்கின்றோம்.

மேலும் பரீட்சை முடிவுகள் தாமதமானதால் பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்க தவறிய 2011, 2012 ஆண்டுக்குரிய பட்டதாரிகளையும் (அண்ணளவாக 152) அரசசேவையில் உள்வாங்க நடவடிக்கை எடுத்து தருமாறு சம்மந்தப்பட்டவர்களை தாழ்மையுடன் கேட்டக்கொள்கின்றோம் எனவும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .