2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஏறாவூர் நகரை ஊடறுக்கும் பிரதான வீதியை விஸ்தரிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


தேசிய நெடுஞ்சாலைக்கு ஏற்ற வகையில் ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியை விஸ்தரிக்கும் முகமாக  ஏறாவூர் நகரில் வீதி விஸ்தரிக்கப்படும் எல்லையை அளந்து அடையாளமிட்டு வருகின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் இன்று வியாழக்கிழமை இந்த வேலையை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே விஸ்தரிக்கப்பட்ட ஏறாவூர் நகர பிரதான வீதி ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. தற்போதுள்ள இந்த வீதியில் வருவதும் போவதுமாக ஒரே நேரத்தில் 02  வாகனங்கள் மாத்திரமே செல்லக் கூடியதாகவுள்ளது.

இனிமேல் தேசிய நெடுஞ்சாலைத் தராதரத்திற்கேற்ப இருவழிப்பாதையாக விஸ்தரிக்கப்படவுள்ள இந்த வீதியில் வருதற்கும் போவதற்குமாக 04  வாகனங்கள் பயணிக்க முடியும்.

அகலமாக்கப்படும் நவீன நெடுஞ்சாலையின் ஒருமருங்கு 36 அடி அகலமானதானதாக இருக்குமென்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் முதல் வீதி விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் எனவும்  அவர் கூறினார்.

இதேவேளை, புதிய வீதி விஸ்தரிப்புக்; காரணமாக ஏறாவூர் நகர கடைத்தொகுதிகளிலுள்ள பலரது கடைகள் பாதியளவுக்கு உடைக்கப்பட வேண்டிய நிலைமை தோன்றியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .