2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பாடசாலையில் கொள்ளை; மூவர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் களவு போன கணினிகளையும் அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.பி.பெரேரா தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய கணினி அறை உடைக்கப்பட்டு கணினிகள் இரண்டு திருடப்பட்டதாக பாடசாலை நிறுவாகத்தினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத் துறையினரின் தகவலின் படி கணினிகள் இரண்டும் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்ய்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்னவின் ஆலோசனையில் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மாயா ரன்ஜன் தலைமையில் சென்ற குழுவினரே கணினிகளையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .