2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இலட்சியத்தை அழிக்க முடியாது: அரியம் எம்.பி

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் எமது இலட்சியத்தை அழிக்க முடியாது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் எட்டாவது ஆண்டு நினைவு தின வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அவரின் நினைவு தின வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன், 'மா மனிதர் ஜாசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்தாலும் அவரின் இலட்சியத்தையும் அவரின் கொள்கையையும் அழித்து விடமுடியாது' என்றார்.

'ஜோசப் பரராஜசிங்கம் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர். மா மனிதர் ஜாசப் பரராஜசிங்கத்தை யார் படுகொலை செய்தார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அவரை படுகொலை செய்தவர்களினால் அவரின் இலட்சியத்தை அழிக்க முடியவில்லை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது அவரின் வெற்றிடத்திற்கு சந்திர நேரு நியமிக்கப்பட்டார். ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட போது சட்டத்தரணி சிறிகாந்தா நியமிக்கப்பட்டார். சிவநேசன் படுகொலை செய்யப்பட்ட போது சிறி நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு இவர்கள் கொலை செய்யட்ட போது இவர்களின் இலட்சியத்தை கொலை செய்தவர்களினால் அழித்து விடமுடியவில்லை. கொலையாளிகளின் நோக்கம் நிறைவேறவில்லை.
எத்தனை பேரை அழித்தாலும் வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் திர்வுக்கான எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்' என்றார்.

'முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு நாளை கடந்த எட்டு வருடங்களில் இம்முறை மட்டக்களப்பில் ஒரு மண்டபத்தில் அனுஸ்டிக்க சந்தர்க்ப்பம் கிடைத்துள்ளது' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .