2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்: பொலிஸார் விசாரணை

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்டுள்ள கல் வீச்சு தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன.

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் புதிய காத்தான்குடி 1ஆம் குறிச்சி முஅத்தினார் வீதியிலுள்ள வீடொன்றின் மீதே இன்று (27)அதிகாலை இந்த கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் இடம்பெற்றபோது வீட்டினுல் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் உறக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .