2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காணாமல் போன உறவினர்கள் ஒன்றியத்தின் மட்டு. அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் இன்று(28) காலை மட்டக்களப்பு தாமரைக்கேணி வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னைய்யா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ஆனந்த ஜெயபால உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரனுக்கான நியமனக்கடிதத்தினை அதன் தேசிய அமைப்பாளர் கையளித்ததுடன் யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் விபரங்களும் கையளிக்கப்பட்டன.

இந்த அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுமென அதன் மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

இதன்போது, உரையாற்றிய ஆயர் ஜோசப் பொன்னையா
 
'காணாமல் போன கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றும் அழுது கொண்டே இருக்கின்றனர். உறவினர்கள் சோகத்துடனும் வேதனையுடனும் வாழ்கின்றனர்.

கடந்த யுத்த அனர்த்தத்தினால் காணாமல் போன கடத்தப்பட்டவர்களை கண்டு பிடித்து தரவேண்டியது அரசாங்கத்தினதும் ஏனையோரினதும் பொறுப்பாகும்.

காணாமல் போன கடத்தப்பட்டவர்களை கண்டு பிடித்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் அவர்களை தேடிக் கொண்டிருக்கும் உறவினர்களின் அழுகையை நிறுத்த முடியும்.

காணாமல் போன கடத்தப்பட்டவர்களை கண்டு பிடிப்பது மனித உரிமையாகும். அந்த வகையில் இந்த அலுவலகம் இங்கு திறக்கப்பட்டுள்ளதானது சிறந்த நடவடிக்கையாகும். இத்தைகைய நல்ல பணிக்கு அனைவரினது ஒத்துழைப்பும் உதவியும் அவசியமாகும்' என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .