2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வறிய குடும்பங்களுக்கு ஐம்பது குடிநீர்க் குழாய்க் கிணறுகள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ ஹுஸைன்

போரினால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் ஐயன்கேணி தமிழ் பிரிவைச் சேர்ந்த ஐம்பது வறிய குடும்பங்களுக்கு நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்ளும் குழாய்க் கிணறுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

கிணறுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளி (27) மாலை ஐயன்கேணி தமிழ்   கிராமத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் நகர பிதாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கிணறுகளைக் குடியிருப்பாளர்களிடம் கையளித்தார்.

அலிஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளின் பேரில் தார்-அல்-பிர் அஷோஸியேஸன் எனும் உதவி நிறுவனம் இந்தப் பகுதி மக்களுக்கு குழாய்க் கிணறுகளை நிர்மாணித்துக் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிணறு கையளிக்கும் நிகழ்வில் தார்-அல்-பிர் அஷோஸியேஸன் (DAR-AL-BER  Association) இணைப்பாளர் ஐ.இஸ்ஹாக், ஏறாவூர் நகர சபையின் பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம். தஸ்லீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .