2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இந்தியத் தம்பதி கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையில் இந்தியப் பிரஜைகள் இருவரை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைகள் இருவரையே கைதுசெய்துள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் இருவரும் கணவன், மனைவி எனவும் பொலிஸார் கூறினர்.

தமிழ்நாட்டின் எந்தையூரைச் சேர்ந்த கோப்பையன் மாரியப்பன் (வயது 39), மாரியப்பன் சமணதேவி (வயது 39) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .