2025 மே 01, வியாழக்கிழமை

ஆளுநரின் செயலாளராக சிவநாதன் நியமனம்

Super User   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவின் செயலாளராக கே.சிவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கே.சிவநாதன் கடமையாற்றி வருகின்றார்.

இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக கடமையாற்றி வரும் மாணிக்கம் உதயகுமார் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .