2025 மே 01, வியாழக்கிழமை

கல்லடிப் பால பிரதான வீதியில் மரக்கன்றுகள் நாட்டும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப் பாலத்திலிருந்து  நாவற்குடா வரையான பிரதான வீதியில் அழகிய பூ மரக்கன்றுகள் நாட்டும்  வேலைத்திட்டத்தை பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வீதியை அழகுபடுத்தும் வகையில் இந்த வீதியில் பூ மரக்கன்றுகள் நாட்டும்  வேலைத்திட்டமானது, மட்டக்களப்பு கல்லடி உப்போடை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப் பாலத்திலிருந்து நாவற்குடா வரையான பிரதான வீதியின் நடுவில் 200 எக்ஸ்ஸோறா மரக்கன்றுகள்,  மல்லிகை மரக்கன்றுகள் உட்பட 575 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் இந்த மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் மட்டக்களப்பு கல்லடி உப்போடை மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .