2025 மே 01, வியாழக்கிழமை

காலாவதியான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Kanagaraj   / 2014 ஜனவரி 05 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


காத்தான்குடி நகரில், காலாவதியான, இரு மொழிகளில் லேபல் அச்சிடப்படாத மற்றும் உற்பத்தி திகதி பொறிக்கப்படாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காத்தான்குடி சுகாதார பிரிவுக்குப்பொறுப்பான சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் ஏ.ஏ.றபீக் தெரிவித்தார்.

வாகனத்தினூடாக வர்த்தக நிலையங்களுக்கு சட்டவிரோதமான முறையில் குறித்த உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டபோதே சுகாதாரத பிரிவினர் இவற்றை நேற்று கைப்பற்றினர்.

பொதியிடப்பட்ட மிக்சர் பக்கெட்டுகள், நிலக்கடலை மூடைகள், பிஸ்கட் பக்கற்றுகள் உட்பட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவின்பேரிலேயே காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .