2025 மே 01, வியாழக்கிழமை

ஏறாவூரிலுள்ள வீடொன்றில் கொள்ளை; விசாரணை முன்னெடுப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 05 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரிலுள்ள அஸத்துல்லாஹ் றிஸ்மிலா என்பவரின் வீட்டிலிருந்து தங்கநகைகள், பணம் உட்பட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து, குறித்த வீட்டுக்கு மோப்ப நாய் சகிதம் சென்று நேற்று சனிக்கிழமை விசாரணைகளை மேற்கொண்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், மக்காமடியிலுள்ள மேற்படி வீட்டிலிருந்து ஒரு மடிக்கணினி, கமெரா, 06  பவுண் தங்கநகைகள், 130 ஸ்டேர்லிங் பவுண்;, ஒரு ஐபோன் என்பன நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (3) பகல்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸில் அன்றையதினம் மாலை முறைப்பாடு செய்துள்ளதாக மேற்படி வீட்டு உரிமையாளர் அஸத்துல்லாஹ் றிஸ்மிலா தெரிவித்தார்.

மேற்படி வீட்டிலுள்ள கணவன், மனைவியாகிய தாங்கள் இருவரும் ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்கள். கடமையின் நிமித்தம் தாங்கள் வெளியில் சென்றிருந்தபோது இந்தக் கொள்ளை  இடம்பெற்றதாக  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .