2025 மே 01, வியாழக்கிழமை

காலாவதியான உணவுப்பொருட்களை விநியோகித்தவருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு காலாவதியான உணவுப் பொருட்களை விநியோகித்து வந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட  ஒருவரை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்  எம்.ஐ.நூர்தீன் 200,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 7ஆம் திகதி சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்  எம்.ஐ.நூர்தீன் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை  ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையிலேயே சந்தேக நபர் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடியிலுள்ள  வர்த்தக நிலையங்களுக்கு வாகனங்களில் கொண்டுசென்று காலாவதியான உணவுப் பொருட்களை விநியோகித்து வந்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதுடன்,  அவரிடமிருந்து மேற்படி பொருட்களையும் கைப்பற்றியதாக காத்தான்குடி பொதுச் சகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.

நிலக்கடலை, பொதியிட்ட மிக்சர் பைக்கட்டுக்கள்,  பிஸ்கட் பைக்கட்டுக்கள் என்பன சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .