2025 மே 01, வியாழக்கிழமை

மண்புழுக்களுடன் சேதனப்பொருட்களை கலந்து விசேட சேதனப்பசளை தயாரிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து 2012ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட விசேட வகையான சிவப்பு மண்புழுக்களுடன் சேதனப்பொருட்களை கலந்து  விசேட சேதனப்பசளை மட்டக்களப்பு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்தத் திட்டம் தனது முயற்சியில் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வித இரசாயனப் பொருட்களும் இன்றி மாதாந்தம் சுமார் 1,500 கிலோ தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த சேதனப்பசளையானது  கிலோ  150 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இதை தானியப்பயிர்ச் செய்கையாளர்கள் விரும்பி வாங்குவதாகவும் அவர் கூறினார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து 150 சிவப்பு மண்புழுக்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பசளை தயாரிக்கும்போது இந்த மண்புழுக்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 3,000 சிவப்பு மண்புழுக்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் கீழ் சேகரிக்கப்படும் உக்கக்கூடிய பொருட்களை வேறாகவும் மீள்சுழற்சிக்குரிய அசேதனப் பொருட்களான இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்டிக் வகைகள், கண்ணாடிகள், பொலித்தீன்கள் போன்றவற்றை வேறுபடுத்தி இட்டு உதவுமாறு பொதுமக்களுக்கு மாநகர ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .