2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு.மாவட்ட பொங்கல் விழா

Kogilavani   / 2014 ஜனவரி 06 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் மற்றும் பட்டிப் பொங்கல் விழா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கலை,கலாசார நிகழ்வுகளுடன் எதிர்வரும் 17ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

இதேநேரம், மாதாந்தம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் பௌரணமி கலைவிழா இம்மாதம் 15ஆம் திகதி மாலை மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இம்மாத பௌர்ணமி கலைவிழாவில் முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் நல்லதங்காள் வடமோடிக்கூத்து அரங்கேற்றப்படவுள்ளதாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .