2025 மே 01, வியாழக்கிழமை

மழை இன்மையால் மட்டக்களப்பில் பெரும்போக நெற் செய்கை பாதிப்பு

Super User   / 2014 ஜனவரி 06 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த  2013ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கைக்கு எதிர்பார்த்த மழை வீழ்ச்சி கிடைக்காமையினால் பெரும்போக நெற்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெரும்போக நெற் செய்கைக்கான மழையை மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்பார்த்த போதிலும் போதியளவு மழை பெய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு 1,973.7 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 786.8 மில்லி மீற்றர், பெப்ரவரியில் 300.0 மில்லி மீற்றர், மார்ச்சில் 130.2 மில்லி மீற்றர், ஏப்ரலில் 31.7 மில்லி மீற்றர், மேயில் 60.4 மில்லி மீற்றர், ஜுன் மாதத்தில் 3.2 மில்லி மீற்றர், ஜுலையில் 47.3 மில்லி மீற்றர், ஆகஸ்டில் 38.9 மில்லி மீற்றர், செப்டம்பரில் 82.3 மில்லி மீற்றர், ஒக்டோபரில் 24.0 மில்லி மீற்றர், நவம்பரில் 198.3 மில்லி மீற்றர், டிசம்பரில் 271.1 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது.

2012ஆம் ஆண்டு 1,786 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியது. இந்த மழை வீழ்ச்சியை கடந்த 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு மழை வீழ்ச்சி சற்று அதிகரித்து காணப்பட்டுள்ளது. அதே நேரம் கடந்த 2011ஆம் ஆண்டு 3,581 மில்லி மீற்றர் மழை வீழச்சி பதிவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு பெரும்போக நெற்செய்கையில் ஏற்பட்ட விளைச்சல் 2013ஆம் ஆண்டு கிடைக்கவில்லை.  எனினும் கடந்த 2013ஆம் ஆண்டு சிறுபோக நெற் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமோக விளைச்சலை தந்துள்ளது. கடந்த 2013ஆம்  ஆண்டு பெரும்போக நெற் செய்கையின் அறுவடையை இந்த ஆண்டு பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் எதிர்பார்க்க முடியும் என்றும் ஹரிகரன் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் அண்மையில் மழை வேண்டி விவசாயிகள் பிராத்தனை செய்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .