2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கண்காணிப்பு நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஜனவரி 07 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கண்காணிப்பு பலகைகள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கண்காணிப்பு பலகைகளை காட்சிப்படுத்தப்படுத்தியுள்ளன.

இந்த கண்காணிப்பு பலகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் அதில் நீர் கொள்ளும் விபரம், உச்சக் கொள்ளளவு, வான்கதவுகளின் நிலை, திகதி, நேரம், நீர்மட்டம், அபாய நிலை என்பன எழுதப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தத்தின் போது இந்த குளங்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையிலேயே இந்த பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய நீர்ப்பாசன திணைக்கத்திற்கு கீழ் மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்கு கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களின் விபரங்களும் இந்த பலகையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .