2025 மே 01, வியாழக்கிழமை

டெங்கு, தொற்று நோய்களை தடுப்பதற்காக சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 07 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மழைக் காலங்களில் பரவும் டெங்கு மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு நகரிற்குட்பட்ட பிரதான வீதிகள், கான்கள் மற்றும் வீதியில் உள்ள மரக் கிளைகள் என்பவற்றை துப்பரவு செய்யும் பணிகள்; மட்டக்களப்பு மாநகரசபையினால் செவ்வாய்கிழமை (7) காலை முன்னெடுக்கப்பட்டன.

நகரைத் துப்புரவாக வைத்திருக்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலை வீதி, புனித மிக்கேல் வீதி, ஆனைப்பந்தி வீதி, சென் மேரிஸ் வீதி என்பன சுத்திகரிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இப்பணியில் மாநகர சபை நிர்வாக ஊழியர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது, நீர்தேங்கி நிற்கும் வடிகான்களை சீர் செய்ததோடு நீர் நிறைந்து நிற்கும் குழிகளும் மூடப்பட்டு துப்பரவு செய்யப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு 486 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார தொற்றுநோய் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாண்டு இதுவரை 3 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .