2025 மே 01, வியாழக்கிழமை

நிலத்துக்கு அடியிலிருந்து சாராயம் மீட்பு; சந்தேகநபருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 08 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் வீடு ஒன்றின் சாமி அறையில் நிலத்தின் கீழ் பதுக்கிவைத்திருந்த ஒரு தொகுதி சாராயப் போத்தல்கள் மற்றும் பியர் டின்கள் பொலிஸாரால் நேற்று (07) கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் அலயத்துக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் சுரங்கம் அமைத்து அங்கு மறைத்து வைத்திருந்த நிலையிலேயே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மதுபானங்களையும் சந்தேகத்தின் பெரில் கைது செய்யப்பட்டவரையும் நேற்று களுவான்சிகுடி நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போது 45,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பட்டிப்பளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .