2025 மே 01, வியாழக்கிழமை

ஊர் வீதியை விரிவாக்கம் செய்வதற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

Super User   / 2014 ஜனவரி 08 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஊர் வீதியை விரிவாக்கம் செய்வதற்காக குறித்த வீதியின் இரு மருங்கிலுமுள்ள குடியிருப்பாளர்கள் வீதியின் மத்தியில் இருந்து ஐந்து மீற்றர் வரை எதிரிவரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அகலப்படுத்தித்தருமாறு காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரினால் நேற்று அவ்வீதியில் வசிப்பவர்களுக்கு அறிவித்தல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"காத்தான்குடி பிரதேசத்தின் சகல வீதிகளும் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.ஆனால் காத்தான்குடியில் முதன் முதலாக பிரதான வீதியாக நிர்மாணிக்கப்பட்ட 'ஊர் வீதி' மிக மோசமான நிலையிலேயே இன்றுவரை காணப்படுகிறது. ஊரின் முக்கியமான பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் இவ்வீதியில் அமைந்திருந்தும்; பயணிக்கும் மாணவர்களும் பாதசாரிகளும் வாகனங்களும் இவ்வீதியின் ஒழுங்கின்மையால் பலவித சிரமங்களை எதிர்கொள்வது யாவரும் அறிந்த உண்மையாகும்.

2013ம் ஆண்டு ஐனவரி மாதம் மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் இந்த வீதியின் புனரமைப்பு தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயங்கள் மிகவும் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது. 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் பழைய கல்முனை வீதியை (ஊர் வீதி) நவீன வீதியாக புனரமைப்பு செய்வதற்கு 160 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்த செயற்பாட்டிற்கு இடையூறாகவுள்ள மதில்கள் மற்றும் வேலிகளை அகற்றித்தந்து வீதியின் புனர்நிர்மாண பணிகளுக்கு ஒத்துழைப்பும் பங்களிப்பும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .