2025 மே 01, வியாழக்கிழமை

வெளிநாடு செல்லும் தாய்மாருக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; கோறளைப்பற்றில் தீர்மானம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 08 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


தாய்மார்கள் வேலை வாய்ப்பிற்க்காக மத்திய கிழக்கு நாட்டிற்க்கு செல்லல் மற்றும் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துதல் போன்றவற்றை தடுப்பதற்கு, தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதியினை கிராம சேவர்கள் இரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கோறளைப்பற்று பிரதேச கல்வி அபிவிருத்தி சமுகமேம்பாடு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் நேற்று செவ்வாய் கிழமை கோறளைப்பற்று பிரதேச கல்வி அபிவிருத்தி சமுகமேம்பாடு தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரான மாகாணசபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்திரகுமார், ஞா.கிருஷ்ணப்பிள்ளை, மா.நடராஜா ஆகியோர்களுடன் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தட்ச்சணகௌரி தினேஸ், கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா மற்றும் பாடசாலை அதிபர்கள், கிராமசேவகர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் போன்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்டோர்களினால் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆசிரியர் இடமாற்றம்

கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா இந்த வலயத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தினை கண்டறிந்து சேவையில் அமர்த்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள் சுமார் 22பேர் தமிழ் பாடசாலைகளில் தங்களது கடமையை சரிவரச் செய்ய முடியாது என்று கூறி தங்கள் பிரதேசங்களுக்கு சென்று கடமையாற்றும் முகமாக இடமாற்றம் கோரி விண்ணப்பித்து கால விரயத்தினை ஏற்படுத்தி மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைக்கு பங்கம் விளைவிப்பதாக சுட்டிக்காட்டினார்.

இந் நிலைமைக்கு தீர்வு காணும் முகமாக குறித்த ஆசிரியர்களை நிரந்தர இடமாற்றம் செய்து விடுவிப்பு செய்து குறித்த ஆசிரியர் வெற்றிடங்களை வைக்கும்படியும் இவ் வெற்றிடத்திற்கு எதிர்காலத்தில் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவினால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

மேற்படி கல்வி வலயத்தில் மாணவர்களின் இடைவிலகல் நிலைமை மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்கின்ற வீதம் குறைவடைந்து காணப்படுவதாகவும் இதற்க்கு இவர்களது தாய்மார்கள் வேலை வாய்ப்பிற்காக மத்திய கிழக்கு நாட்டிற்கு செல்லல் மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துதல் போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

இவ் நிலைமையினை தடுப்பதற்க்கு கிராமசேவர்கள் வெளிநாடு செல்வோர்களுக்கான அனுமதியினை இரத்துச் செய்யும்படியும் பிரதேச பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் அதிபர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் இணைந்து குறித்த பிரதேசங்களில் இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலைகளில் சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்க்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

மாணவர்களின் வரவினை அதிகரிக்க ஏற்பாடு


சிறுதேன் கல் கிராமத்தில் உள்ள பாடசாலையில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதினால் அப்பாடசாலையினை மூடிவிடுதல் அல்லது மாணவர்களை வேறு பாடசாலையோடு இணைத்தல் மற்றும் மாணவர்களின் வரவினை அதிகரித்தல் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்வதற்க்கு அப் பிரதேச கிராமசேவகர் சரியானதொரு ஆய்வு அறிக்கையினை அடுத்த மாத பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டது.


யானைத் தொல்லை


வடமுனை, ஊத்துச்சேனை, தரவை, வாகனேரி, போன்ற பிரதேசங்களில் காலை வேளைகளில் யானைத் தொல்லைகள் காணப்படுவதினால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் அச்சம் காட்டுவதாகவும்  இதனால் மாணவர் வரவு குறைவடைவதாகவும்  இவர்களின் கல்வி நடவடிக்கை அன்றாடம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி அதிபர்களினால் தெரிவிக்கப்பட்டது. இதனை நிவர்த்தி செய்ய வணஜீவராசிகள் அதிகாரிகளின் உதவியை நாடுவதாக தெரிவிக்கப்பட்டது.

இராணுவத்திடமிருந்து பாடசாலை கட்டிடத்தை பெற யோசனை

முறக்கொட்டான்சேனை இராமகிருஸ்ணன் பாடசாலை, ஏற்கெனவே இருந்த இடத்தில் இராணுவ முகாம் இருப்பதாகவும் அவர்களிடம் இருந்து அப்பாடசாலை கட்டிடங்களை பெற்றுக்கொள்வதற்;கு வழிவகை செய்து தரும்படியும் அப்பிரதேச கிராமசேவகரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை இராணுவ உயர் அதிகாக்ரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் பௌதிக வளப்பிரச்சினையினை போக்க மத்திய அரசு,மாகாண அரசுகளின் உதவியை பெறுவதற்க்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .