2025 மே 01, வியாழக்கிழமை

சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் முகாமைத்துவ உதவியாளர்களாக தரமுயர்வு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 08 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்
, எம்.எம்.அனாம்

சமூர்த்தி உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றியவர்கள் தற்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டு முகாமைத்துவ உதவியாளர் தரம் - 1, தரம் - 2, தரம் - 3 எனும் தரங்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

கோறளைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றிய சுமார் 21 சமுர்;த்தி உத்தியோகஸ்த்தர்கள் நேற்று (07) முதல் முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன், நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் கௌரி, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பூ.குணரெட்ணம், பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகஸ்தர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .