2025 மே 01, வியாழக்கிழமை

இளம் வயது திருமணம், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2014 ஜனவரி 09 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏம்.எம்.அனாம்


இளம் வயது திருமணம், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பவற்றை தடுக்கும் நோக்கில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலமொன்று மட்டக்களப்பு, காவத்தமுனையில் புதன்கிழமை (8) இடம்பெற்றது.

இவ் ஊர்வலம் காவத்தமுனை ஜூம்மா பள்ளிவாயல் சந்தியில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியினூடாக காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் வரை சென்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், பிரதேச மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

'சிறுவயது திருமணம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களினால் ஏற்படும் சமுக சீரழிவுகள், உள சமுக பாதிப்புக்கள், உடல் நிலை பாதிப்பு, இளம் வயது கர்ப்பத்தினால் ஏற்படும் விளைவுகள், திருமணத்திற்கு முன் பாலியல் தொடர்புகளால் ஏற்படும் தீமைகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் தாங்கிச்சென்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .