2025 மே 01, வியாழக்கிழமை

பாடசாலையை விட்டு இடை விலகிய ஏறாவூர்ப்பற்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று, காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி கற்று இடை விலகிய மாணவ மாணவியருக்கு அவர்கள் மீண்டும் வகுப்புக்களில் சேர்ந்து கொள்வதற்காக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வறுமை காரணமாகவும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் அசிரத்தை காரணமாகவும் படித்துக் கொண்டிருக்கும் போதே வகுப்புக்களுக்குச் செல்லாது இடைவிலகியிருந்த 14 மாணவ மாணவியர்களைத் தேடியறிந்து மீண்டும் அவர்களை வகுப்புக்களில் சேர்ப்பித்ததாக கிராம சேவையாளர் எஸ்.கோகுலன் தெரிவித்தார்.

சமூக கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் காயான்குடா கிராமத்தைச் சேர்ந்த இடை விலகிய மாணவ மாணவியர் 14 பேருக்கு தலா ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டதாக பிளான் லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சி ஆலோசகர் ரீ.ஆர்.மூர்த்தி, தெரிவித்தார்.

கிராம சேவையாளர் எஸ்.கோகுலன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஏறாவூர்ப் பற்று கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.முருகேசபிள்ளை, சிறுவர் உரிமைகள் மேம்படுத்தல் அதிகாரி ரீ.மதிராஜ் சிறுவர் பாதுகாப்பு உளநல சமூக அலுவலர் ரீ.ஜெயசாந்தினி மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .