2025 மே 01, வியாழக்கிழமை

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவு அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2014 ஜனவரி 11 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான இடத்தினைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்..

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவினை தனியாக அமைப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் தாழங்குடாவில் உள்ள பிரதிமைச்சரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன், பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாடசாலைக்கான ஆரம்பபிரிவை அமைப்பதற்கு உள்ள காணி பாடசாலைக்கு தூர நிலையில் உள்ளதால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று பாடசாலை சமூகம் இதன்போது பிரதியமைச்சருக்கு சுட்டிக்காட்டியது.
அதற்கு பிரதியமைச்சர், 'வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கு அருகில் ஆரம்ப பிரிவினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.

'பாடசாலைக்கு அருகில் மாகாண பிரதி தபால்மா அதிபரின் காரியாலயம் உள்ளது. இதனை வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு கொண்டுசென்று மாகாண பிரதி தபால்மா அதிபர் காரியாலயம் இருக்கும் இடத்தில் வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவு கட்டிடத்தினை அமைப்பதற்காக முதல் கட்டமாக 19 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.  இந்த ஆண்டுக்குள் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்' என்றார்.
 
2011ஆம் ஆண்டு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலைக்கான ஆரம்ப பிரிவினை அமைப்பது தொடர்பில் பாடசாலை சமூகம் பிரதியமைச்சரிடம் கோரியதினை தொடர்ந்து இது தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவுடனும் பிரதியமைச்சர் கலந்துரையாடியிருந்தார்.
 
இதன் கீழ் கல்வியமைச்சரின் பாடசாலை வேலைகளுக்கான பணிப்பாளர் மாலினி பொன்சேகா தலைமையிலான குழுவினர் மட்டக்களப்புக்கு வருகைதந்து பாடசாலை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டுசென்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த சந்திப்பின்போது பாடசாலையின் கல்வி நிலைமை மற்றும் எதிர்கால கல்விச்செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .