2025 மே 01, வியாழக்கிழமை

உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவர் நியமிப்பதை எதிர்க்கவில்லை: த.தே.கூ

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிக்குமார்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவரை நியமிப்பதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த அமைச்சில் வேறு ஒரு இனத்தைச் சேர்ந்த அதிகாரி இருக்க வேண்டும் எனறே கோரினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சபராஜ் இன் ஹோட்டலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பி.அரிய நேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி கே.துரைராஜசிங்கம், இரா.துரைரத்தினம், ஜனா கருணாகரன், பிரசன்னா இந்திர குமார், எம்.நடராசா, கிருஸ்னப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டாம் எனக் கோரவில்லை. எமது நிலைப்பாடு தொடர்பில்  ஆளுநருக்கு நாம் வழங்கிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். மத்திய அரசில் முஸ்லிம் ஒருவர் உள்ளூராட்சி அமைச்சராக இருப்பதுடன் மத்திய அமைச்சின் செயலாளர் முதல் முக்கிய அதிகாரிகள் முஸ்லிம்;களாகவும் சிங்களவர்களாகவும் உள்ளனர்.
 
இதே வேளை கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர்,உள்ளுராட்சி அமைச்சர்,அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் முஸ்லிம்களாக உள்ளனர்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சில் முஸ்லிம் அதிகாரிகள் உள்ளனர்;. ஆதலால், கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மாத்திரம் தான் வேறு ஒரு இனத்தவராக பதவி வகித்தார். இவ்வாறு இருந்த நிலையில் அந்தப் பதவிக்கும் முஸ்லிம் ஒருவரை நியமிக்காது மற்றய இனத்தில் இருந்து ஒருவரை நியமிக்குமாறே கோரியிருந்தோம்.

எமது நோக்கம் முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமிப்பதை எதிர்ப்பதல்ல அந்த அமைச்சின் கீழ் உள்ள ஒரு அதிகாரியாவது ஏனைய இனத்தவராக இருக்க வேண்டும் என்பதுதான்.இதனை பிழையாக முஸ்லிம் மக்கள் கருதக் கூடாது எனத் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • VALLARSU.COM Saturday, 11 January 2014 03:15 PM

    நியாயமான கோரிக்கைதானே?

    Reply : 0       0

    aj Sunday, 12 January 2014 06:36 AM

    சரியான கோரிக்கை தானே? இதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் சில அரசியல் கட்சிகள் மட்டும் மிகவும் கீழத்தரமான பிரசாரம் செய்கிறது. கல்முனையில் ஏன் தமிழ் பிரதேசம் இருக்கக்கூடாது என்று இவர்கள் அங்கு மட்டும் சமரசம் பேசுகிறார்கள். தமிழ் பிரதேசம் வேண்டும் இல்லை என்பது அந்த மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். எல்லோரும் கிழக்கில் முஸ்லிம் என்று இருக்க வேண்டும் ஏன்று சட்டம் ஏதும் இல்லையே. போதும் உங்கள் மார்க்கவாதம். நீங்கள் பேசினால் அது மார்க்கம் ஏனைய இனம் பேசினால் அது வெங்காயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .