2025 மே 01, வியாழக்கிழமை

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் விழிப்புணர்வு

Super User   / 2014 ஜனவரி 12 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

ஆட்பதிவு திணைக்களத்தினால் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில நேற்று நடைபெற்றது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான ரி.யோகேந்திரன் மற்றும் கே.சரவணபவன், ஆகியோர்கள் கலந்துகொண்டு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமளித்தனர்.

இதன்போது இலத்திரனியல் அடையாள அட்டைக்குரிய விண்ணப்பங்கள் எவ்வாறு பூரணப்படுத்துவது, புகைப்படங்களின் அளவுகள் போன்ற பல விளக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் பட்டடிப்பளை பிரதேச செயலகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம சேவையாளர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .