2025 மே 01, வியாழக்கிழமை

பிரதமர் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா

Super User   / 2014 ஜனவரி 14 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்பாக்கியநாதன், ரி.எல்.ஜவ்பர்கான்


பிரதமர் தி.மு.ஜயரட்ன தலைமையில் தேசிய தைப்பொங்கல் வைபவம் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அழைப்பையேற்று பிரதமர் வருகை தந்து தைப்பொங்கல் வைபவத்தை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஆலயத்தில் பூசை வழிபாடுகளை இரங்க வரதராச சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .