2025 மே 01, வியாழக்கிழமை

பாசிக்குடா கடலில் மூழ்கி மாலபேயைச்சேர்ந்தவர் மரணம்

Kanagaraj   / 2014 ஜனவரி 14 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


பாசிக்குடா கடலில் இன்று பகல் குளித்துக் கொண்டிருந்த கொழும்பு, மாலபே, நுகவத்த தலமங்க வீதியில் வசிக்கும் 55 வயதான அனுர விக்கிரதுங்க நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், இருவர் காப்பாற்றப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாலேபே, நுகவத்த தலமங்க வீதியில் வசிக்கும் 10 பேர் அடங்கிய குடும்ப உறவினர்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக கடந்த ஞாயிற்றுக் கிழமை கண்டிக்குச் சென்று அங்கிருந்து மட்டக்களப்புக்கு நேற்று வந்துள்ளனர்.

அவர்கள்,   பாசிக்குடா கடலில் இன்று குளித்துக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குளித்துகொண்டிருந்தவர்களில் மூவர் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை அவதானித்த கல்குடா பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் அந்த மூவரையும் காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இதன்போதே ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவத்தில் அனுர விக்கிரதுங்க (வயது 55) என்பவரின் சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட கோறளைப்பற்று பிரதேசத்திறங்கான திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ரமேஸ்ஆனந் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்ரவிட்டார். இச்சம்வம் தொடர்பான விசாரனைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .