2025 மே 01, வியாழக்கிழமை

படகுப்பாதை சேவை பாதிப்பால் பயணிகள் சிரமம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 21 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனை வாவியில் சேவையில் ஈடுபட்டுவரும் 02 இயந்திரப் படகுப்பாதைகளில் ஒரு படகுப்பாதை கடந்த  3ஆம் திகதியிலிருந்து சேவையில் ஈடுபடுவதில்லையென  பிரயாணிகள் தெரிவித்தனர்.

கொந்தராத்துக்காரர் மாறியமையினால் இதன் சேவை தடைப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இதனால் ஆசிரியர்கள், அரச, அரசசார்பற்ற திணைக்களங்களின் ஊழியர்கள்,  வியாபாரிகள், உள்ளிட்ட பலரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
எனவே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்; பிரயாணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .